وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : دينار أنفقته في سبيل الله، ودينار أنفقته في رقبة، ودينار تصدقت به على مسكين، ودينار أنفقته على أهلك، أعظمها أجرًا الذي أنفقته على أهلك ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவிடும் ஒரு தீனார், ஓர் அடிமையை விடுதலை செய்ய செலவிடும் ஒரு தீனார், ஓர் ஏழைக்குத் தர்மமாக வழங்கும் ஒரு தீனார், உங்கள் குடும்பத்திற்காக செலவிடும் ஒரு தீனார் ஆகிய இவற்றில், அதிக நன்மை தருவது உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் செலவிடுவதே ஆகும்".