அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சொற்பொழிவு ஆற்றி, கூறினார்கள்: 'பெண்களே! உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்; ஏனெனில், நிச்சயமாக நீங்கள் தாம் மறுமை நாளில் நரகவாசிகளில் பெரும்பான்மையினராக இருப்பீர்கள்.'"