அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், தன் கணவர் ஊரில் இருக்கும்போது அவரின் அனுமதியின்றி (நஃபிலான) நோன்பு நோற்பது ஆகுமானதல்ல, மேலும் அவரின் அனுமதியின்றி அவரின் வீட்டிற்குள் எவரையும் அவள் அனுமதிக்கவும் கூடாது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ், முத்தஃபக்குன் அலைஹி, ரமழான் பற்றிய குறிப்பு இல்லாமல் (அல்-அல்பானி)