அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர்களிடம்) கூறினார்கள்:
(நீ பிறருக்குக்) கொடு; அதனை எண்ணிக் கணக்கிடாதே. (அவ்வாறு நீ கணக்கிட்டால்) அல்லாஹ்வும் உனக்கு (வழங்கும்போது) கணக்கிடுவான். மேலும் (செல்வத்தைப்) பதுக்கி வைக்காதே. (அவ்வாறு நீ செய்தால்) அல்லாஹ் உனக்கு (வழங்குவதை) தடுத்து விடுவான்.