حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ، ارْضَخِي مَا اسْتَطَعْتِ .
அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உமது பணப்பையை நீர் மூடி வைக்காதீர்; அவ்வாறாயின் அல்லாஹ்வும் உமக்குத் தன் அருட்கொடைகளைத் தடுத்துவிடுவான். உம்மால் இயன்றவரை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்யும்."
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதரே, அஸ்ஸுபைர் (ரழி) அவர்கள் எனக்குக் கொண்டு வருவதைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. அவர் கொண்டு வருவதிலிருந்து நான் ஒரு சிறிய அளவைக் கொடுத்தால் என் மீது ஏதேனும் பாவம் உண்டா?" அதற்கு அவர் (ஸல்) கூறினார்கள்: "உங்களால் முடிந்ததைக் கொடுங்கள், உங்களிடம் உள்ளதைச் சேமித்து வைக்காதீர்கள். அவ்வாறு செய்தால், அல்லாஹ் உங்களுக்கான வாழ்வாதாரத்தைத் தடுத்துவிடுவான்."