حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ح. وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ وَالتَّعَفُّفَ وَالْمَسْأَلَةَ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، فَالْيَدُ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَةُ، وَالسُّفْلَى هِيَ السَّائِلَةُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) இருந்தபோது தர்மம் பற்றியும், பிறரிடம் நிதி உதவி கேட்பதைத் தவிர்ப்பது பற்றியும், பிறரிடம் யாசிப்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்: "உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது. உயர்ந்த கை கொடுப்பவரின் கை; தாழ்ந்த கை யாசிப்பவரின் கை."
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தர்மத்தைப் பற்றியும், (பிறரிடம்) யாசிப்பதைத் தவிர்ப்பதைப் பற்றியும் குறிப்பிடும்போது கூறினார்கள்: "உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது; உயர்ந்த கை என்பது கொடுப்பதாகும், தாழ்ந்த கை என்பது யாசிப்பதாகும்."
யஹ்யா அவர்கள் எனக்கு மாலிக் அவர்களிடமிருந்தும், அவர் நாஃபிஉ அவர்களிடமிருந்தும், அவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்தும் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸதகாவைப் பற்றியும், (பிறரிடம்) யாசிப்பதைத் தவிர்ப்பது பற்றியும் குறிப்பிடும்போது மிம்பரிலிருந்து கூறினார்கள்: "உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது. உயர்ந்த கை என்பது செலவு செய்வதாகும்; தாழ்ந்த கை என்பது யாசிப்பதாகும்."
وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال وهو على المنبر، وذكر الصدقة والتعفف عن المسألة: اليد العليا خير من اليد السفلى. واليد العليا هي المنفقة، والسفلى هي السائلة ((متفق عليه)).
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது மிம்பரில் (பிரசங்க மேடையில்) ஸதகா (தர்மம்) மற்றும் யாசகம் பற்றி குத்பா (மார்க்க உரை) நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, "உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது, உயர்ந்த கை என்பது கொடுப்பதாகும், தாழ்ந்த கை என்பது யாசிப்பதாகும்" என்று கூறினார்கள்.