وعنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس المسكين الذي ترده التمرة والتمرتان، ولا اللقمة واللقمتان إنما المسكين الذي يتعفف ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம்பழங்களைக் கொண்டோ, அல்லது ஒன்று அல்லது இரண்டு கவளம் உணவைக் கொண்டோ திருப்பியனுப்பப்படுபவர் மிஸ்கீன் (ஏழை) அல்லர். உண்மையான மிஸ்கீன் என்பவர், தமக்கு வறுமை இருந்தும் யாசகம் கேட்பதைத் தவிர்த்துக் கொள்பவரே ஆவார்".