நான் சயீத் பின் ஜுபைர் அவர்களிடம் ரஜப் மாத நோன்பு பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னிடம் கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இனி நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் நினைக்கும் அளவிற்கு நோன்பு நோற்பார்கள்; மேலும், இனி நோன்பே நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் நினைக்கும் அளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்து விடுவார்கள்.