இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2025ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் (வழக்கமாக) இஃதிகாஃப் இருப்பார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2465சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ ‏.‏ قَالَ نَافِعٌ وَقَدْ أَرَانِي عَبْدُ اللَّهِ الْمَكَانَ الَّذِي يَعْتَكِفُ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَسْجِدِ ‏.‏
இப்னு உமர் (ரழி) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்.

நாஃபிஉ கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்த இடத்தை அப்துல்லாஹ் (இப்னு உமர்) (ரழி) அவர்கள் எனக்குக் காட்டினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ். முஸ்லிம், புகாரி (நாஃபிவுடைய கூற்று இல்லாமல்). மேலும்... (அல்பானி)
صحيح م خ دون قول نافع وقد ... (الألباني)
1773சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَنْبَأَنَا يُونُسُ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ ‏.‏ قَالَ نَافِعٌ وَقَدْ أَرَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْمَكَانَ الَّذِي كَانَ يَعْتَكِفُ فِيهِ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்.
நாஃபிஃ கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்த இடத்தை எனக்குக் காட்டினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)