أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا حَبِيبٌ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ضُبَاعَةَ، أَرَادَتِ الْحَجَّ فَأَمَرَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تَشْتَرِطَ فَفَعَلَتْ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: துபாஆ (ரழி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரிடம் ஒரு நிபந்தனையிடுமாறு (ஹஜ்ஜை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், நான் தடையுற்ற இடத்திலேயே இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்வேன் என்று) கூறினார்கள். அவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி செயல்பட்டார்கள்.