இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2717சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، عَنْ حَمَّادٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحِجَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் துல்-ஹஜ் மாதப் பிறை தென்பட்ட சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காக) புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ, அவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டட்டும். யார் உம்ராவிற்காக இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ, அவர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டட்டும்' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)