இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1569ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ الأَعْوَرُ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ اخْتَلَفَ عَلِيٌّ وَعُثْمَانُ ـ رضى الله عنهما ـ وَهُمَا بِعُسْفَانَ فِي الْمُتْعَةِ، فَقَالَ عَلِيٌّ مَا تُرِيدُ إِلاَّ أَنْ تَنْهَى عَنْ أَمْرٍ فَعَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏ فَلَمَّا رَأَى ذَلِكَ عَلِيٌّ أَهَلَّ بِهِمَا جَمِيعًا‏.‏
ஸயீத் பின் அல்-முஸய்யப் அவர்கள் கூறியதாவது:
அலி (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் 'உஸ்ஃபான்' என்னுமிடத்தில் இருந்தபோது, 'தமத்துஃ' (ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வது) குறித்து கருத்து வேறுபாடு கொண்டார்கள். அப்போது அலி (ரலி), "நபி (ஸல்) அவர்கள் செய்த ஒரு காரியத்தை நீங்கள் தடுக்கவே விரும்புகிறீர்கள்" என்று கூறினார்கள். (உஸ்மான் (ரலி) அவர்கள் அதைத் தடுப்பதைக்) கண்ட அலி (ரலி), (ஹஜ் மற்றும் உம்ரா) ஆகிய இரண்டிற்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح