حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ رَأَيْتُ الأُصَيْلِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يُقَبِّلُ الْحَجَرَ وَيَقُولُ إِنِّي لأُقَبِّلُكَ وَإِنِّي لأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ .
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“முன்நெற்றியில் வழுக்கை விழுந்திருந்த உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், (ஹஜருல் அஸ்வத்) கல்லை முத்தமிடுவதை நான் கண்டேன். (அப்போது) அவர்கள், ‘நான் உன்னை முத்தமிடுகிறேன்; நீ நன்மையோ தீமையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்’ என்று கூறினார்கள்.”