"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாத்திலிருந்து புறப்பட்டார்கள்; உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தார்கள். ஒட்டகம் அவர்களைச் சுமந்து அசைந்து சென்றது. நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியிருந்தார்கள்; (எனினும்) அக்கைகள் அவர்களின் தலைக்கு மேல் உயரவில்லை. அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா)வை வந்தடையும் வரை நிதானமாகவே பயணித்தார்கள்."