حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ، كَانَتِ امْرَأَةً ثَبِطَةً فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ تَدْفَعَ مِنْ جَمْعٍ قَبْلَ دُفْعَةِ النَّاسِ فَأَذِنَ لَهَا .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழி) அவர்கள் மந்தமான (உடல்வாகு கொண்ட) பெண்ணாக இருந்தார்கள். எனவே, (ஹஜ்ஜின் போது) மக்கள் (முஸ்தலிஃபாவிலிருந்து) புறப்படுவதற்கு முன்னால், ஜம்உவிலிருந்து (அதாவது முஸ்தலிஃபாவிலிருந்து) புறப்பட்டுச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவரும் அவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.