"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீது இருந்தவாறே, 'மக்களே! உங்கள் ஹஜ் வழிமுறைகளை (என்னிடமிருந்து) எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டிற்குப் பிறகு நான் மீண்டும் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது' என்று கூறிக்கொண்டே ஜம்ராவில் கல்லெறிவதை நான் கண்டேன்."
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
தியாகத் திருநாளன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தின் மீது இருந்தவாறே கல்லெறிவதையும், "உங்கள் ஹஜ் கிரியைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு மீண்டும் நான் ஹஜ் செய்வேனா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறுவதையும் நான் பார்த்தேன்.