இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

124ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عِنْدَ الْجَمْرَةِ وَهُوَ يُسْأَلُ، فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ‏.‏ قَالَ ‏"‏ ارْمِ وَلاَ حَرَجَ ‏"‏‏.‏ قَالَ آخَرُ يَا رَسُولَ اللَّهِ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ‏.‏ قَالَ ‏"‏ انْحَرْ وَلاَ حَرَجَ ‏"‏‏.‏ فَمَا سُئِلَ عَنْ شَىْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ‏.‏
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவிற்கு அருகில் இருக்க, (மக்கள்) அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களைக் கண்டேன். ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ரமீ செய்வதற்கு முன்பே அறுத்துவிட்டேன்" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ரமீ செய்யுங்கள்; (அதனால்) குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள். மற்றொருவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறுப்பதற்கு முன்பே தலையை மழித்துவிட்டேன்" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அறுங்கள்; (அதனால்) குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள். (அச்சமயம் கிரியைகளை) முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ செய்யப்பட்டது குறித்து எதைப் பற்றிக் கேட்கப்பட்டாலும், "செய்யுங்கள்; (அதனால்) குற்றமில்லை" என்றே அவர்கள் பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح