حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَفَاضَ يَوْمَ النَّحْرِ ثُمَّ صَلَّى الظُّهْرَ بِمِنًى يَعْنِي رَاجِعًا .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் அறுத்துப் பலியிடும் நாளில் (மக்காவிற்குச் சென்று) தவாஃப் செய்தார்கள் (தவாஃபுல் இஃபாளா/ஸியாரா); பின்னர் (மினாவிற்குத்) திரும்பி வந்த நிலையில் மினாவில் லுஹர் தொழுகையைத் தொழுதார்கள்.