ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்-அப்தஹ்வில் தங்கியது, அங்கிருந்து புறப்படுவதற்கு வசதியாக (மட்டுமே) இருந்ததால்தான்.”
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அப்தஹ்வில் (மக்காவிற்கும் மினாவுக்கும் இடையிலான ஒரு பள்ளத்தாக்கு) தங்குவது (ஹஜ்ஜின்) சுன்னா அல்ல. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கியதெல்லாம், அவர்கள் (மக்காவிலிருந்து) புறப்படுவதற்கு அது மிகவும் வசதியாக இருந்த காரணத்தால்தான்.”