இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இச்செய்தியின் இப்னு உலய்யா மற்றும் அஸ்ஸகஃபீ ஆகியோரது அறிவிப்பில், ''(எதிரிகள் வசம் குர்ஆன் சிக்கிக்கொள்ளுமோ என) நான் அஞ்சுகிறேன்'' என்று இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் மற்றும் ளஹ்ஹாக் பின் உஸ்மான் ஆகியோரது அறிவிப்பில், ''எதிரிகள் அதை அடைந்துகொள்வார்களோ என்ற அச்சத்தினால்'' என்று இடம்பெற்றுள்ளது.