அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அதன் மக்களுக்கு (அதாவது மதீனாவாசிகளுக்கு)த் தீங்கு செய்ய நாடுகிறவனை, தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ் கரைத்துவிடுவான்." இப்னு ஹாதிம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'தீங்கு' என்பதற்குப் பதிலாக 'தீமை' என்று இடம்பெற்றுள்ளது.