ராஃபிஉ பின் கதீஜ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவை புனிதமானதாக அறிவித்தார்கள். மேலும் நான், அதன் இரண்டு கருங்கல் நிலப்பரப்புகளுக்கு இடைப்பட்ட பகுதியை புனிதமானதாக அறிவிக்கிறேன்." (இதன் மூலம்) மதீனாவை அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவித்தார்கள்:
“நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமாக்கினார்கள். நான் மதீனாவை – அதன் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை – புனிதமாக்கியுள்ளேன். அங்குள்ள முள் மரங்கள் வெட்டப்படக் கூடாது; அங்குள்ள வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது.”