சஅத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முந்தைய அறிவிப்பில் உள்ளதைப் போன்றே இப்போதும் அறிவித்துவிட்டு, பின்வருமாறு மேலதிகமாகக் கூறினார்கள்):
"மதீனாவாசிகளுக்கு எவரேனும் தீங்கிழைக்க நாடினால், ஈயம் உருகுவதைப் போன்று அல்லது தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ் அவனை நெருப்பில் உருக்கிவிடுவான்."
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அபுல் காஸிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் இந்த நகரத்தின் (அதாவது மதீனா) மக்களுக்குத் தீங்கு செய்ய நாடுகிறாரோ, அவரைத் தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ் கரைத்துவிடுவான்."
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَنْ أَرَادَ أَهْلَ الْمَدِينَةِ بِسُوءٍ أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் அல்-மதீனா வாசிகளுக்குத் தீங்கு நாடுகிறாரோ, அவரை அல்லாஹ், உப்பு தண்ணீரில் கரைவது போல் கரைத்துவிடுவான்.”