"சுன்னத் (நபிவழி) யாதெனில், ஒருவர் கன்னி அல்லாத மனைவி இருக்கும் நிலையில் கன்னிப் பெண்ணை மணமுடித்தால், அவரிடம் ஏழு நாட்கள் தங்க வேண்டும்; பின்னர் (மனைவியரிடையே) முறை வைத்துக்கொள்ள வேண்டும். கன்னியான மனைவி இருக்கும் நிலையில் கன்னி அல்லாத ஒருவரை மணமுடித்தால், அவரிடம் மூன்று நாட்கள் தங்க வேண்டும்; பின்னர் (மனைவியரிடையே) முறை வைத்துக்கொள்ள வேண்டும்."
(அறிவிப்பாளர்) அபூ கிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "நான் விரும்பியிருந்தால், 'இதை அனஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்' என்று கூறியிருக்கலாம்."
அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் (இதனை அறிவிக்கும்போது), காலித் (ரஹ்) அவர்கள், "நான் விரும்பியிருந்தால், 'இதை அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்' என்று கூறியிருக்கலாம்" என்று சொன்னதாகக் கூறினார்கள்.