"பாகப்பிரிவினை செய்யப்படாத, கூட்டாக உள்ள அனைத்திலும் - அது வீடாக இருந்தாலும் சரி, தோட்டமாக இருந்தாலும் சரி - ஷுஃப்ஆ (முன்னுரிமை உரிமை) உண்டு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். தனது கூட்டாளிக்கு அறிவிப்பதற்கு முன் அதை விற்பது அனுமதிக்கப்படவில்லை; அவர் விரும்பினால் அதை எடுத்துக்கொள்ளலாம் அல்லது விட்டுவிடலாம். அவர் தனது கூட்டாளிக்கு அறிவிக்காமல் அதை விற்றுவிட்டால், அந்த கூட்டாளியே அதற்கு அதிக உரிமை உடையவர் ஆவார்."