அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்: உங்களில் ஒருவரின் பணியாளர் அவருக்காக உணவைத் தயாரித்து, அதன் வெப்பத்தையும் புகையையும் (சமைக்கும் சிரமத்தை) அவர் (பணியாளர்) தாங்கிய நிலையில் அதை அவரிடம் கொண்டுவந்தால், அவர் (பணியாளரை) தம்முடன் சாப்பிட அமரச் செய்ய வேண்டும். உணவு (அனைவருக்கும் போதாத அளவு) குறைவாக இருந்தால், அவர் (பணியாளரின்) கையில் ஒன்று அல்லது இரண்டு கவளங்களை வைக்க வேண்டும்.