ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கும் அதிகமான பெறுமானத்திற்காக அன்றி திருடனின் கை வெட்டப்படக்கூடாது.
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கும் மேற்பட்ட (மதிப்புக்காக) அன்றி திருடனின் கை வெட்டப்படக்கூடாது.
ரஃபி இப்னு கதீஜ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'விளைபொருட்கள் அல்லது பேரீச்சம் பாளைகளைத் (திருடுவதற்காக) கை துண்டிக்கப்படாது.'"