இவர்கள் அனைவரும் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாகவே அறிவிக்கின்றனர். ஸாலிஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ''பிறகு அல்லாஹ் (நபி (ஸல்) அவர்களின் உயிரைக்) கைப்பற்றும் வரை அவர்கள் தொழவில்லை'' எனும் தகவல் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது.
யூனுஸ் அவர்களின் அறிவிப்பாளர் தொடரைப் போன்றே, அதே கருத்துடனும் ஜுஹ்ரீ அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஜுஹ்ரீ அவர்கள் வழியாக, ஸாலிஹ் அவர்கள் ஜுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸின் கருத்துப்படியே இந்த அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளனர்.
அபூ ஹுரைரா (ரழி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரழி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து, மாலிக் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே அறிவிக்கின்றனர். ஆயினும் இவர்கள் இருவரின் அறிவிப்பிலும், (விபச்சாரம் செய்த அடிமைப் பெண்ணை) விற்பது மூன்றாவது தடவையிலா அல்லது நான்காவது தடவையிலா என்பதில் சந்தேகம் உள்ளது.