حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "துரோகம் செய்பவனுக்கு (நம்பிக்கை மோசடி செய்பவனுக்கு) மறுமை நாளில் ஒரு கொடி உயர்த்தப்படும். (அப்போது) 'இது இன்னாருடைய மகன் இன்னாரின் துரோகம் (நம்பிக்கை மோசடி)' என்று (பகிரங்கமாக) கூறப்படும்."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: நியாயத்தீர்ப்பு நாளில் ஒவ்வொரு துரோகிக்கும் ஒரு கொடி இருக்கும் (அது அவனது துரோகச் செயலை வெளிப்படுத்தும் அடையாளமாக அமையும்).