حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُنَفِّلُ بَعْضَ مَنْ يَبْعَثُ مِنَ السَّرَايَا لأَنْفُسِهِمْ خَاصَّةً سِوَى قِسْمِ عَامَّةِ الْجَيْشِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாங்கள் அனுப்பும் சரியாவின் சில உறுப்பினர்களுக்கு, அவர்கள் பொதுவாக இராணுவத்துடன் பங்கிட்டுக் கொள்ளும் பங்குகளுக்கு மேலதிகமாக, கூடுதல் பங்கினை வழங்குவார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டுமொத்த இராணுவத்திற்கு செய்யப்படும் பங்கீட்டிலிருந்து தனியாக, அவர்கள் அனுப்பிய சில படைப்பிரிவுகளுக்கு அவர்களுக்கென பிரத்தியேகமாக (கூடுதலாக ஒன்றை) கொடுத்து வந்தார்கள். இவை அனைத்திலும் ஐந்தில் ஒரு பங்கு அவசியம்.