இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3477ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، قَالَ عَبْدُ اللَّهِ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَحْكِي نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ فَأَدْمَوْهُ، وَهْوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَيَقُولُ ‏ ‏ اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لاَ يَعْلَمُونَ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், இறைத்தூதர்களில் ஒருவரைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்ததை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத்தூதரை அவருடைய சமூகத்தார் அடித்து, இரத்தம் சொட்டச் செய்திருந்தனர். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, “அல்லாஹும்மஃக்ஃபிர் லிகவ்மீ ஃபஇன்னஹும் லா யஃலமூன்” (அல்லாஹ்வே! என் சமூகத்தாரை மன்னிப்பாயாக! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்) என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
36ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال‏:‏ كأني انظر إلى رسول الله صلى الله عليه وسلم يحكي نبياً من الأنبياء، صلوات الله وسلامه عليهم، ضربه قومه فأدموه وهو يمسح الدم عن وجهه، يقول ‏:‏ ‏ ‏اللهم اغفر لقومى فإنهم لا يعلمون‏ ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏.‏
அபூ அப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“தம் சமூகத்தாரால் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்த வைக்கப்பட்ட நபிமார்களில் ஒருவரைப் பற்றி விவரித்துக் காட்டிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் (இப்போதும்) பார்ப்பது போன்று உள்ளது. (அந்நபி) தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தவாறே,
**‘அல்லாஹும்மக்ஃபிர் லிகவ்மீ ஃபஇன்னஹும் லா யஃலமூன்’**
(யா அல்லாஹ்! என் சமூகத்தாரை மன்னிப்பாயாக! ஏனெனில், நிச்சயமாக அவர்கள் அறியமாட்டார்கள்)
என்று கூறினார்கள்.”

(புகாரி, முஸ்லிம்)