حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ احْتَبَسَ جِبْرِيلُ صلى الله عليه وسلم عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتِ امْرَأَةٌ مِنْ قُرَيْشٍ أَبْطَأَ عَلَيْهِ شَيْطَانُهُ. فَنَزَلَتْ {وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى}
ஜுன்தப் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வஹீ கொண்டுவருவதில்) சிறிது காலம் தாமதப்படுத்தப்பட்டார். எனவே குறைஷிப் பெண்களில் ஒருத்தி, "(உமக்கு வஹீ கொண்டுவரும்) உம்முடைய ஷைத்தான் உம்மை கைவிட்டுவிட்டான்" என்று கூறினாள். ஆகவே (பின்வரும் வசனங்கள்) அருளப்பட்டன: "முற்பகல் மீது சத்தியமாக, மேலும் இரவின் மீது சத்தியமாக அது அமைதியாக இருக்கும் போது! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; அவன் உம்மை வெறுக்கவுமில்லை." (திருக்குர்ஆன் 93:1-3)
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அதனால் ஓர் இரவு அல்லது இரண்டு இரவுகள் (தொழுகைக்காக) எழவில்லை. அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து, "முஹம்மதே! உமது ஷைத்தான் உம்மைவிட்டு விலகிவிட்டான் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினாள். அப்போது அல்லாஹ் (பின்வருமாறு) அருளினான்: "{வள்ளுஹா; வல்லைலி இதா ஸஜா; மா வத்தஅக்க ரப்புக வமா களா}".
ஜுன்துப் பின் சுஃப்யான் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு, இரண்டு அல்லது மூன்று இரவுகள் (தொழுகைக்காக) எழுந்திருக்கவில்லை. அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து, "முஹம்மதே! உமது ஷைத்தான் உம்மை விட்டு விலகிவிட்டான் என்றே நான் கருதுகிறேன். இரண்டு அல்லது மூன்று இரவுகளாக அவன் உம்மை அணுகுவதை நான் காணவில்லை" என்று கூறினாள். அப்போது கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் (பின்வருமாறு) அருளினான்: "{வள்ளுஹா, வல்லைலி இதா ஸஜா, மா வத்தஅக்க ரப்புக்க வமா கலா}" (பொருள்: "முற்பகல் மீது சத்தியமாக! இருள் சூழ்ந்து கொள்ளும் இரவு மீது சத்தியமாக! (நபியே!) உமது இறைவன் உம்மை கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை.").