இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2856சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، قَالَتْ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ أَخْلُفُهُمْ فِي رِحَالِهِمْ وَأَصْنَعُ لَهُمُ الطَّعَامَ وَأُدَاوِي الْجَرْحَى وَأَقُومُ عَلَى الْمَرْضَى ‏.‏
உம்மு அத்திய்யா அல்-அன்சாரிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் பங்கேற்றுள்ளேன். (அவர்கள் களம் செல்லும்போது) அவர்களின் பயணச் சுமைகளைப் பாதுகாத்துக் கொண்டும், அவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்தும், காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சையளித்தும், நோயாளிகளைக் கவனித்துக் கொண்டும் இருந்தேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)