அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ லிஹ்யான் கோத்திரத்தாரை நோக்கி ஒரு படையை அனுப்பிவிட்டு, 'இரண்டு பேரில் ஒருவர் புறப்படட்டும்' என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (வீட்டில்) தங்கியிருந்தவர்களிடம், 'உங்களில் எவரேனும் ஒரு போர் வீரரின் குடும்பத்தையும் சொத்தையும் கவனித்துக் கொண்டால், அவர் (ஜிஹாதில்) புறப்பட்டுச் செல்பவரின் நன்மையில் பாதியைப் பெறுவார்' என்று கூறினார்கள்.”