உக்பா இப்னு ஆமிர் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: ‘யார் (அம்பு) எய்வதைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைக் கைவிடுகிறாரோ, அவர் எனக்கு மாறு செய்துவிட்டார்.’”
وعنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : من عُلم الرمي ثم تركه فليس منا أو فقد عصى ((رواه مسلم)).
உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் வில்வித்தையைக் கற்றுக்கொண்டு பின்னர் அதைப் புறக்கணிக்கிறாரோ, அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்." (அல்லது,) "அவர் (அல்லாஹ்வின் தூதருக்கு) மாறு செய்துவிட்டார்" (என்றும் கூறினார்கள்).