இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4227ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي الْحُسَيْنِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لاَ أَدْرِي أَنَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ أَنَّهُ كَانَ حَمُولَةَ النَّاسِ، فَكَرِهَ أَنْ تَذْهَبَ حَمُولَتُهُمْ، أَوْ حَرَّمَهُ فِي يَوْمِ خَيْبَرَ، لَحْمَ الْحُمُرِ الأَهْلِيَّةِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நாட்டுக் கழுதைகள் மக்களின் சுமை சுமக்கும் பிராணிகளாக இருந்த காரணத்தினால், மக்களின் வாகனங்கள் இல்லாமல் போய்விடுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்ததால் (அதன் இறைச்சியைத்) தடைசெய்தார்களா? அல்லது கைபர் தினத்தன்று அதை (மார்க்க ரீதியாகத்) தடுத்தார்களா? என்பது எனக்குத் தெரியவில்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح