அப்துல்லாஹ் இப்னு முகஃபல் அல்-முஸனீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சிறு கற்களைச்) சுண்டி எறிவதைத் தடை செய்தார்கள். மேலும், 'நிச்சயமாக அது வேட்டைப் பிராணியைக் கொல்வதில்லை; எதிரியைக் காயப்படுத்துவதுமில்லை. ஆனால், அது கண்ணைப் பறித்துவிடும்; பல்லை உடைத்துவிடும்' என்று கூறினார்கள்."