ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். பிறகு, "ஸவ்பானே! இந்த ஆட்டின் இறைச்சியை நமக்காகப் பக்குவப்படுத்துவீராக!" என்று கூறினார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்து சேரும்வரை அதிலிருந்து அவருக்கு நான் உண்ணக் கொடுத்து வந்தேன்.