இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5633சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الشُّرْبِ فِي الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالنَّقِيرِ ‏.‏
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹன்தம் (எனும் ஒருவகை பச்சை நிற மண்பாண்ட ஜாடிகள்), சுரைக்குடுவைகள் மற்றும் மரத்தால் குடையப்பட்ட பாத்திரங்களில் குடிப்பதற்குத் தடை விதித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
3403சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الشُّرْبِ فِي الْحَنْتَمِ وَالدُّبَّاءِ وَالنَّقِيرِ ‏.‏
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹன்தம், துப்பா மற்றும் நகீர் (போன்ற பாத்திரங்களில் பானங்கள் விரைவாக போதையை ஏற்படுத்தும் நிலையை அடைவதால், அவற்றில்) பருகுவதை தடுத்தார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)