அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும், வலது கையால் ஆணுறுப்பைத் தொடுவதையும், மேலும் மலஜலம் கழித்த பின் வலது கையால் துடைப்பதையும் தடுத்தார்கள்.
இப்னு அபி கத்தாதா அவர்கள், தமது தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், (பருகும் போது) பாத்திரத்தினுள் மூச்சு விடுவதையும், தமது வலது கையால் மர்ம உறுப்பைத் தொடுவதையும், தமது வலது கையால் சுத்தம் செய்வதையும் தடை செய்தார்கள்.