حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، وَعَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلا خَيَّاطًا دَعَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، فَقَرَّبَ مِنْهُ ثَرِيدًا عَلَيْهِ دُبَّاءُ، قَالَ: فَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، يَأْخُذُ الدُّبَّاءَ، وَكَانَ يُحِبُّ الدُّبَّاءَ، قَالَ ثَابِتٌ: فَسَمِعْتُ أَنَسًا، يَقُولُ: فَمَا صُنِعَ لِي طَعَامٌ، أَقْدَرُ عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءُ، إِلا صُنِعَ.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு தையல்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்து, ரொட்டி, இறைச்சி மற்றும் குழம்புடன் கூடிய, அதில் சுரைக்காயும் இருந்த ஓர் உணவைப் பரிமாறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காயை விரும்புவார்கள்.” ஸாபித் (ரழி) அவர்கள் கூறினார்கள்; “பின்னர் அனஸ் (ரழி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: ‘அதன் பிறகு, சுரைக்காய் கொண்டு தயாரிக்கக்கூடிய எந்த உணவாக இருந்தாலும் அது எனக்காகத் தயாரிக்கப்பட்டது!’”