அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது, உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பட்டு அங்கியைக் கண்டார்கள். அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதரே! தூதுக்குழுக்களைச் சந்திக்கும்போதும், வெள்ளிக்கிழமைகளிலும் அணிந்து கொள்வதற்காக இந்த பட்டு அங்கியினை தாங்கள் வாங்கிக்கொள்ளக் கூடாதா?” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இதை மறுமையில் எந்தப் பங்கும் இல்லாதவர்களே அணிவார்கள்.”