الثامن : عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم رأى خاتمًا من ذهب في يد رجل، فنزعه فطرحه وقال: يعمد أحدكم إلى جمرة من نار فيجعلها في يده ! فقيل للرجل بعد ما ذهب رسول الله صلى الله عليه وسلم : خذ خاتمك؛ انتفع به. قال: لا والله لا آخذه أبدًا وقد طرحه رسول الله صلى الله عليه وسلم. ((رواه مسلم)).
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அதைக் கழற்றி எறிந்துவிட்டு, “உங்களில் ஒருவர் நெருப்புக்கரியை எடுத்துத் தம் கையில் வைத்துக்கொள்கிறார்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு, அந்த மனிதரிடம், “உமது மோதிரத்தை (தங்கத்தை) எடுத்து, அதைப் பயன்படுத்திக்கொள்ளும்” என்று கூறப்பட்டது. அதற்கு அவர், “இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூக்கி எறிந்த ஒன்றை நான் ஒருபோதும் எடுக்க மாட்டேன்” என்று கூறினார்.