وعن أبي طلحة زيد بن سهل رضي الله عنه قال: كنا قعودًا بالأفنية نتحدث فيها فجاء رسول الله صلى الله عليه وسلم فقالم علينا فقال: "ما لكم ولمجالس الصعدات؟ فقلنا: إنما قعدنا لغير ما بأس، قعدنا نتذاكر، ونتحدث. قال: "إما لا فأدوا حقها: غض البصر، ورد السلام، وحسن الكلام" ((رواه مسلم)). "الصُّعُدات" بضم الصاد والعين، أي: الطرقات.
அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் எங்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள திண்ணைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களருகே வந்து நின்று, "நீங்கள் ஏன் சாலைகளில் அமர்ந்திருக்கிறீர்கள்? அவற்றில் அமர்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் பதிலளித்தோம்: "நாங்கள் எந்தத் தீங்கும் செய்யும் நோக்கத்தில் அங்கு அமரவில்லை. நாங்கள் (மார்க்க) அறிவைப் பற்றி விவாதிக்கவும் பேசவும்தான் அமர்ந்திருக்கிறோம்." அதற்கு அவர்கள் (ஸல்), "நீங்கள் (அங்கு) அமர வேண்டியிருந்தால், சாலையின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டும்: உங்கள் பார்வையைத் தாழ்த்துங்கள், ஸலாத்திற்கு பதிலளியுங்கள், நல்ல முறையில் பேசுங்கள்" என்று கூறினார்கள்.