இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவரும் மற்றொருவரைச் சபையில் எழுப்பிவிட்டு, பின்னர் அவரது இடத்தில் அமர வேண்டாம்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தம் சகோதரரை அவருடைய இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அதில் அமர வேண்டாம்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தம் சகோதரரை அவரது இருப்பிடத்தில் இருந்து எழுப்பிவிட்டு, பின்னர் அதில் (அவர்) அமர வேண்டாம்."