இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"விதியை மிகைக்கக்கூடிய ஏதேனும் ஒன்று இருந்திருந்தால், திருஷ்டி (கண் திருஷ்டி) அதை மிகைத்திருக்கும். (அதன் காரணமாக) உங்களைக் கழுவிக்கொள்ளும்படி கேட்கப்பட்டால், நீங்கள் கழுவிக்கொள்ளுங்கள்."
உபைத் பின் ரிஃபாஆ அஸ்-ஸுரக்கீ கூறினார்கள்:
“அஸ்மா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! ஜாஃபர் (ரழி) அவர்களின் பிள்ளைகள் கண் திருஷ்டியால் பீடிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்காக நான் ருக்யா* ஓதலாமா?’ என்று கேட்டபோது, அவர்கள் (ஸல்) ‘ஆம், ஏனெனில், இறைவிதியை எதுவும் முந்திக்கொள்ளுமானால், அது கண் திருஷ்டியாகத்தான் இருந்திருக்கும்’ என்று கூறினார்கள்.”