அப்து அர்-ரஹ்மான் பின் அல்-அஸ்வத் அவர்கள், தமது தந்தை வாயிலாக அறிவித்தார்கள்:
நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் ஓதிப்பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்சாரிகளில் ஒரு குடும்பத்தினருக்கு எல்லா வகையான விஷத்தையும் குணப்படுத்த ஓதிப்பார்க்க அனுமதி வழங்கியிருந்தார்கள்.