அறியாமைக் காலத்தில் நாங்கள் மந்திரம் ஓதி வந்தோம், மேலும் நாங்கள் கேட்டோம்: அல்லாஹ்வின் தூதரே! இதைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவர்கள் (ஸல்) பதிலளித்தார்கள்: உங்கள் மந்திரங்களை என்னிடம் சமர்ப்பியுங்கள். அவற்றில் இணைவைப்பு இல்லாத வரை மந்திரங்களில் எந்தத் தீங்கும் இல்லை.