وعن قبيصة بنت أبي عبيد، عن بعض أزواج النبي صلى الله عليه وسلم، ورضي الله عنها، عن النبي صلى الله عليه وسلم قال: من أتي عرافًا فسأله عن شيء، فصدقه، لم تقبل له صلاة أربعين يومًا ((رواه مسلم)).
அபூ உபைதின் மகளான கபீஸா அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் சிலர் (ரழி) வாயிலாக அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் குறிசொல்பவரிடம் சென்று, அவரிடம் ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்துக் கேட்டு, அவரை நம்புகிறாரோ (அதாவது, அவர் மறைவானவற்றை அறிவதாக நம்புகிறாரோ), அவருடைய நாற்பது நாட்களுக்கான தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது (அதாவது, அந்தத் தொழுகைக்குரிய நன்மைகள் கிடைக்காது, ஆனால் தொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும்)."