حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي. وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களில் எவரும் கபுஸத் நஃப்ஸீ என்று கூற வேண்டாம், மாறாக லகிஸத் நஃப்ஸீ என்று கூறட்டும்.”
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي، وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي . تَابَعَهُ عُقَيْلٌ.
ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரும் ‘கபுஸத் நஃப்ஸி’ என்று கூற வேண்டாம். மாறாக, ‘லக்கிஸத் நஃப்ஸி’ என்று கூறட்டும்."
அபூ உமாமா இப்னு ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள் தம் தந்தை (சஹ்ல்) வாயிலாக அறிவிக்கிறார்கள்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் எவரும் ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் கெட்டுவிட்டது) என்று கூற வேண்டாம்; மாறாக, ‘லகிஸத் நஃப்ஸீ’ (என் மனம் சங்கடப்படுகிறது) என்று கூற வேண்டும்.”